Wednesday, March 14, 2007

309. கவாஸ்கர் பாண்டிங் - சண்டை வலுக்கிறது - ஹையா ஜாலி !

எனது முந்தைய பதிவில், ஊர் ரெண்டுபட்டால், (என் போன்ற!) கூத்தாடிகளுக்கு ஜாலி என்று எழுதியது, தற்போது கவாஸ்கர் கொடுத்துள்ள பதிலடியால் 'சூப்பர் ஜாலியாகி' விட்டது :)

தான் எவ்வாறு ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரராக விளங்க முடிந்தது என்பதை, ரிக்கி பாண்டிங்கின் வாயிலிருந்து புறப்பட்ட (வார்த்தை) பவுன்ஸர்களை, அழகாக ஹூக் செய்து, அவற்றை பாண்டிங்கின்
வாயிற்கே திருப்பி அனுப்பி, அவரது வாயை அடைத்து, நிரூபித்து விட்டார் !!!  இதற்கு ஆங்கிலத்தில், "struck back with vengeance" என்ற சொலவடையை பயன்படுத்துவார்கள் ! என்னடா, போன பதிவிலே, பாண்டிங்குக்கு ஆதரவாப் பேசிட்டு, இப்ப பிளேட்டைத் திருப்பி, கவாஸ்கரைப் புகழ்ந்து பேசறாரே நம்ம பாலா என்று யாரும் தவறாக எண்ண வேண்டியதில்லை ! (பேச்சுத்) திறமை எங்கிருந்தாலும், அதை பாராட்டறது நம்ம பாலிஸி ;-)

ESPN தொலைக்காட்சியில் பேசிய கவாஸ்கர், "ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டக்களத்தில் நடந்து கொள்வது போல், ஒரு மது அருந்தும் இடத்தில் நடந்து கொண்டால், 'மண்டை சூடான' (hot headed) யாரிடமாவது உதைபடுவது திண்ணம் !  ஏனெனில், அவர்கள் பயன்படுத்தும் மொழி அவ்வளவு மோசமானது." என்று ஒரு சாத்து சாத்தியுள்ளார் :)  ஒரு பாருக்கு (Bar) வெளியே நடந்த ஒரு அடிதடி சண்டையில், டேவிட் ஹூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த லிட்டில் மாஸ்டர், "அவருக்கு ஏற்பட்டது, ஆஸ்திரேலிய அணி வீரர் யாருக்கு வேண்டுமானாலும் நிகழும் அபாயம் உள்ளது !  ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எல்லாருமே அப்படி என்று நான் கூற வரவில்லை.  இப்படிப்பட்ட கண்ணியமற்ற மொழியை வெளியே பிரயோகித்தால், அவர்கள் முகத்தை நோக்கி ஒரு கைமுட்டி பாயும் வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் !" என்று கூறியுள்ளார்.

1981-இல் தன்னை வெளிநடப்பு செய்யத் தூண்டியது, ஆஸ்திரேலிய வீரர்களின் படு மோசமான சொற்களும், அவர்கள் நடந்து கொண்ட விதமும், என்று தெளிவுபடுத்திய கவாஸ்கர், "நான் அவர்கள்
களத்தில் நடந்து கொள்ளும் விதத்தை விமர்சித்தால், அதற்கு பதிலாக, பாண்டிங் இந்திய அணியின் தோல்விகளைப் பற்றிப் பேசுவது எப்படி சரியாகும் ?  ஒரு அணி மைதானத்தில் எத்தகைய குணங்களை
வெளிப்படுத்துகிறது என்பது கிரிக்கெட் விளையாட்டில் மிக முக்கியமான ஒன்று என்பது என் கருத்து" என்று மேலும் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளே, பலருக்கும் அவ்வணியை பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்று பாண்டிங் கூறியதை திட்டவட்டமாக நிராகரித்த கவாஸ்கர், "1970 மற்றும் 80-களில், வெஸ்ட் இண்டீஸ் அணி, பிற அணிகளை (டெஸ்ட் போட்டிகளில்) 3 நாட்களில் வீழ்த்தியிருந்தாலும், அவ்வணியின் வீரர்களை மக்கள் நேசித்தனர். மக்களிடையே பிரபலமும், நல்ல பெயரும் அவர்களுக்கு அமைந்தது ! அதற்குக் காரணம், மைதானத்தில் அவர்கள் எதிரணியிடம் நடந்து கொண்ட விதமே ! Sledging ஒரு போதும் செய்ததில்லை ! தங்கள் திறமையையும், பலத்தையும் விளையாட்டில் (மட்டுமே!) காட்டி,
வெற்றிகளை குவித்தனர். அவர்களிடம் தோற்ற அணியினருக்கு, ஒரு புன்னகையுடன் ஆறுதல் கூறினர் ! தலைக்கனமோ, திமிரோ இன்றி, down to earth ஆக அவர்கள் இருந்ததால், உலகளாவிய புகழுடன் விளங்கினர்.  அதனாலேயே, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி, அன்று இருந்தது போல, ஒரு பலமிக்க அணியாக உருவெடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகிறனர்!" என்று கூறி, பாண்டிங்கிக்கிற்கு எதிரான தனது இன்னிங்க்ஸை (கவாஸ்கர்) கச்சிதமாக முடித்துக் கொண்டார் :) 

இப்போது பாண்டிங் என்ன கூறப்போகிறார் என்று பார்ப்போம்!  பாண்டிங் நல்ல பதிலடி கொடுத்தார்னா,
அவருக்குப் புண்ணியமாப் போகும் :) நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை
பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 309 ***

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment :)

நாமக்கல் சிபி said...

//நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை
பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)
//

அதே!

நாமக்கல் சிபி said...

சோதனைப் பின்னூட்டம்!

வணக்கம்

நாமக்கல் சிபி!

-L-L-D-a-s-u said...

கவாஸ்கர் பெரிய பவுலராக இருந்திருக்கவேண்டியவர் .;) ..
ஆட்டத்தில் காட்டாத வேகம்.. வார்த்தையில் .. எனிவே பாண்டிங்குக்கு மூக்குல பஞ்ச்.
சபாஷ்

enRenRum-anbudan.BALA said...

சிபி,
அட, நீங்களும் நம்ம மாதிரி தானா ;-)

வாங்க, தாஸ¤ !
கவாஸ்கர் மீடியம் பேஸ் போட்டு, டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட் எடுத்திருக்கிறார், தெரியுமா ? :) அவர் ஒரு நல்ல விமர்சகர், வர்ணனையாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது, அது அனுபவத்தால் வந்த சொத்து !
****************************

மணிகண்டன் said...

////நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை
பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)
//

ஓ அப்ப நீங்க தான் கோர்த்து விடுறதா? :)))

enRenRum-anbudan.BALA said...

மணிகண்டன் , வாங்க !

Thanks :)

ஓகை said...

அந்தப் பதிவிலிட்ட பின்னூட்டம் இந்தப்பதிவுக்கும் பொருந்துகிறது.

//காவஸ்கர் தவறு செய்தது போண்டிங் செய்யும் தவறுகளுக்கு லைசென்ஸா? சுட்டிக்காட்டப்பட்ட தவறுக்கு பதில் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் விமர்சித்தவரை சாடுவது வடிகட்டிய திமிர்த்தனம். விர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தம்மை நினைப்பவர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கும்.

பொண்டிங் என்ன நினைக்கிறார்? ஆடுவதில் இருக்கும் திறமைக்காக அவர்களின் மற்ற செயல்பாடுகளை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றா? காலனியாதிக்க காலங்களின் தினவு மொத்தமாக உருண்டு திரண்டு பொண்டிங் போன்றவர்களின் தலையில் ஏறியிருக்கிறது.//

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails